விஜய் முதல்-அமைச்சரானதை என்னால் நம்பவே முடியவில்லை என்று நடிகர் அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரல் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் கூட்டணி ‘மாஸ்டர், கைதி, விக்ரம்’ படத்தில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் 'அநீதி', 'ரசவாதி', 'போர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவான படம் 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிலீஸ் தேதி அறிவிப்பு 'ஒன்ஸ் மோர்' படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 28 ந் தேதி திரையங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. இசை ஆல்பம் வெளியீடு அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் இசை ஆல்பம் சமீபத்தில் வெளியானது. படத்தின் 13 பாடல்களையும் ஆல்பமாக படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் புரமோஷ்னகளுக்காக நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய அர்ஜுன் தாஸ், “முதல்வன் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, அதில் சித்திரிக்கப்பட்டுள்ள நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நம்பமுடியாதவையாகத் தோன்றுகின்றன. ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் சாருக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்பது எனக்கு உண்மையாகவே தெரியாது. ஆனால், திடீரென அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும் என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாவில் அவ்வளவு பெரிய நாயகனான அவர் தற்போது முதல்-அமைச்சராக மாறிவிட்டார். இது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-cant-believe-vijay-became-the-chief-minister-actor-arjun-das




