சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தேர்தலின் போது திரைமறைவில் நடந்த சில விஷயங்களையும் பேசியிருந்தார். Anand அவர் பேசியதாவது, ``28 வருடமாக முதல்வருடன் நெருங்கி பழகியிருக்கிறேன். அவர் சினிமாவில் மட்டும்தான் நடிப்பார். வெளியில் நடிக்கமாட்டார். அவரை 'Cult' என்பார்கள். ஆனால், அப்படி ஸ்டாராக இருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு கிடையவே கிடையாது. தலைவரிடம் பேசும்போது இரண்டு வார்த்தை புகழ்ந்து பேசினாலே சேரை திருப்பிக் கொள்வார். அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. பெரிய புரொடுயூசர் வந்தாலும் 10 நிமிடம்தான் பேசுவார். ஆனால், எளிய நிர்வாகிகளை அழைத்து சென்றால் அவர்களை நலம் விசாரித்து 2 மணி நேரம் பேசுவார். Anand ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் ஒரு தொகுதியை குறிப்பிட்டு போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், 'அங்கே என் மாவட்டச் செயலாளர் நீண்ட காலம் உழைத்திருக்கிறார். மன்னிக்கவும்' என தலைவர் கூறிவிட்டர்." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/famous-director-asked-for-a-seat-cm-vijay-immediately-refused-minister-ananth-reveals-secret




