கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும். ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத் தடைகளுக்கு மாறியது. இனி அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ராணுவத் தாக்குதல் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 30), அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான்- அமெரிக்காநேபாள வெள்ளம்: ஒரே ஒரு போன் கால்; 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமையாசிரியர்! அமெரிக்கா என்ன சொல்கிறது? இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள தகவல்: “இன்று அதிகாலை லாராக் தீவிலிருந்த ஈரானின் இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை ஹார்முஸ் நீர்ச்சந்திக்குள் கடல் கண்ணிவெடிகளைத் தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தயாராகி வந்தது அமெரிக்கப் படைகளுக்குத் தெரிந்தது. அதனால்தான் இந்தத் தாக்குதல் தற்போது நடந்துள்ளது.” ஈரானின் எச்சரிக்கை அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் அரசின் செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, ஈரானிய ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர், “லாராக் தீவு மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு எங்களின் பதிலடி என்பது நிச்சயம் உண்டு” என்று தெரிவித்திருக்கிறார். நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/us-iran-war-flares-up-again-after-larak-island-strike



