மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெகவின் முக்கியஸ்தர்கள் அந்த தொகுதியில் முகாமிட்டிருக்கின்றனர். தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். ஆதவ் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், 'எடப்பாடி தொகுதியில் மட்டும் நம்முடைய வேட்பாளரும் துணை வேட்பாளரும் ஓடிவிட்டார்கள். காரணம், எடப்பாடி பழனிசாமி. கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே ஸ்டாலின் ஐயா அவுட். எடப்பாடியில் மட்டும் நம்முடைய வேட்பாளர் விசில் சின்னத்தில் நின்றிருந்தால் எடப்பாடி பழனிசாமியும் அவுட் ஆகியிருப்பார். கடைசி நிமிடத்தில் தலைவர் டிவி சின்னத்தில் வாக்களிக்க சொன்னதற்கே அந்த வேட்பாளர் 5 சுற்றுகளில் லீட் எடுத்தார். அதுதான் எங்கள் தலைவரின் வலிமை. மதுராந்தகத்திலும் இரண்டே நாள் பிரசாரத்தில் தலைவர் தொகுதியை வென்று கொடுப்பார். எடப்பாடி பழனிசாமி ஐயா முடிந்தால் எடப்பாடி தொகுதியில் பதவி விலகட்டும். காலேஜ் முடித்த ஒரு தங்கையை நிறுத்தி பழனிசாமியை தலைவர் தோற்கடித்து காண்பிப்பார். தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில், அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்து சட்டமன்றத் தலைவராக முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்வதாக அவரே கையெழுத்து வாங்கியிருக்கிறார். ஆதவ் திமுக - அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க திட்டமிட்டது. இதை நான் சொல்லவில்லை. கம்யூனிஸ்ட்டுகளும் ஐ.யூ.எம்.எல் கட்சியினரும் கூறினார்கள். புரட்சித் தலைவராலும் எம்.ஜி.ஆராலும் வளர்க்கப்பட்டவர்களுக்கு திமுகதான் ஒரே எதிரி. அப்படியிருக்க திமுகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதனால்தான் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். அதிமுகவினரின் வாக்குகளும் தவெகவுக்கு வந்ததால்தான் 35% வாக்குகளை நாம் எடுத்துவிட்டோம். இப்போதைய அதிமுக எடப்பாடி அதிமுக. புரட்சித் தலைவர், அம்மாவின் அதிமுக இதுவல்ல' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/resign-now-well-field-a-college-educated-young-woman-and-defeat-you-aadhav-challenges-edappadi-palaniswami




