சென்னை, நாகர்கோவில் அருகே யூடியூபர் வீட்டின் பின்பக்க கதவை கேஸ் கட்டர் மூலம் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவை உடைத்து 220 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியூர் சென்ற நேரத்தில் கைவரிசை நாகர்கோவில் அருகே அந்தணநாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள விஐபி கார்டன் பகுதியில் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார் வினோத்குமார். இவரது 2 வயது குழந்தையின் பிறந்தநாள் விழாவையொட்டி, குடும்பத்துடன் துணி வாங்குவதற்காக நேற்று முன் தினம் திருநெல்வேலி சென்றிருந்தார். பின்னர் இரவு நேரத்தில் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 220 சவரன் தங்க நகைகள் கொள்ளை இதையடுத்து வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 220 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வினோத்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவு சட்டத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்துள்ளது. பின்னர் முதல் மாடிக்குச் சென்று பீரோவை உடைத்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். சமூக வலைதள பதிவுகளை பார்த்து கொள்ளையா? வினோத்குமாரின் மனைவி மதுமிதா (29) யூடியூபராக உள்ளார். அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது தங்க நகைகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்குவதாகவும் அவர் தனது பதிவுகளில் தெரிவித்து வந்ததாக போலீசாரிடம் கூறப்பட்டுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களைப் பார்த்து கொள்ளையர்கள் வீட்டில் அதிக அளவு தங்க நகைகள் இருப்பதை அறிந்து குறிவைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுமிதா தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னிடம் ஏராளமாக பணம் - நகைகள் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் கையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகளுடன் இருப்பது போன்றும், பணமழையில் நனைவது போன்றும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து நூற்றுக்கணக்கான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுமிதா வீடு இருக்கும் பகுதியில் ஏராளமான வலை கம்பெனிகளும், பிளாஸ்டிக் கம்பெனிகளும் உள்ளன. அங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதனால் மதுமிதா வீட்டில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கட்டிங் மிஷனை பயன்படுத்தி மதுமிதா வீட்டின் கதனை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர். வழக்கமாக வட மாநில கொள்ளையர்கள் தான் இதே போன்ற முறைகளில் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். இதனால் மதுமிதா வீட்டு கொள்ளை சம்பவத்தில் வட மாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/were-robbers-from-the-northern-state-who-showed-their-hands-in-the-house-of-a-female-youtuber-police-investigating




