ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. டென்மார்க் ஜோடியை வீழ்த்தி வெற்றி சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ராஸ்முசென் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க் இணையை வீழ்த்தியது. இந்தியாவின் ஒரே நம்பிக்கை இந்த வெற்றியின் மூலம் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் தற்போது சாத்விக்-சிராக் ஜோடி மட்டுமே களத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/satwik-chirag-reach-china-masters-semi-finals-beat-danish-pair-former-world-no-1-srikanth-loses-in-quarter-finals




