புதுடெல்லி, வெண்கல பதக்கம் இந்தியாவின் ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். இந்த நிலையில், ஜண்டுகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; பிரதமர் மோடி வாழ்த்து ”ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, -ல் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள ஜண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது! அவருக்கு வாழ்த்துகள். அவரது இந்தச் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகால ஒழுக்கமான முயற்சி ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். ஒவ்வொரு சவாலையும் வென்று, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modi-congratulates-jandu-kumar-on-winning-bronze-at-the-commonwealth-games




