மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது. மண்டாடி இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே. பாலாஜி, " நான் இங்கு வந்ததற்கு ஒரே காரணம் என் நண்பர் சூரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது. நான் படப் பிரச்னையை சந்தித்தப்போது போன் செய்து எனக்கு முதலில் ஆறுதல் சொன்னது சூரி சார் தான். Mandaadi: "அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார், அதனால்தான்."- சூரி குறித்து வெற்றிமாறன் நீங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். 1999-ம் ஆண்டு வெளியான 'சங்கமம்' படத்தில் விஜயகுமார் சார் காரால் அடிபட்டுப் பறக்கும் சீனில் இருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தான் சூரி. அதிலிருந்து சினிமாவில் ஒருவர் ஹீரோ ஆகுவதற்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது. நடிகர் சூரி அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தார். விடாமுயற்சியுடன் உழைத்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்தான் உதாரணம். இன்று அவருக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதைக் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/rj-balaji-about-soori-in-mandaadi-audio-launch




