மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் வழக்கறிஞர் முருகானந்தத்தின் சித்தப்பாவுமான தண்டபாணி என்பவரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கின் முக்கியச் சாட்சியான தங்கவேல் என்பவரைக் கடந்த 7-ம் தேதி வீட்டருகில் வைத்தே கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இதில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய தங்கவேலு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவில் இருந்து கூலிப்படையை வரவழைத்து படுகொலை நிகழ்த்த திட்டமிட்ட நெல்லை முன்னாள் எஸ்.ஐ சரவணன் என்பவரைக் கைது செய்துள்ளனர். கைதான முன்னாள் எஸ்.ஐ சரவணன் கவின் ஆணவக்கொலை வழிக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் பாளையங்கோட்டை சிறையில் இருந்த சமயத்தில் தண்டபாணியுடன் தொடர்பு ஏற்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் படுகொலை முயற்சிக்குத் திட்டம் தீட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரவணன் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆணவப்படுகொலை வழக்கில் சிறையில் இருந்த சமயத்தில் மற்றொரு படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டி கூலிப்படையை ஏவிய சரவணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/kavin-honour-killing-surjiths-father-saravanan-plots-another-murder-by-hiring-a-contract-killer




