சென்னை, தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குண்டுமல்லி பூ கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் போதிய விலை கிடைக்காததாலும், முறையாக சந்தைப்படுத்த முடியாததாலும் சுமார் 1.5 டன் எடையுள்ள குண்டுமல்லி பூக்களை விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றில் வீசி சென்றுள்ள சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. பூக்கள் சாகுபடி காவேரிப்பட்டினம், அவதானப்பட்டி, திம்மாபுரம், சந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பூக்கள் சாகுபடி நடந்து வரும் நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இந்த முறை பருவம் தவறி குண்டுமல்லிகை பூக்கள் முன்னரே பூத்து விட்டன. இதனால் சந்தையில் ஏற்பட்ட கடும் விலை சரிவால், இந்த ஆண்டின் மகசூலை நம்பியிருந்த பூ விவசாயிகளும் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சென்ட் தொழிற்சாலை காய்கறிகள் மற்றும் பழங்களை விட பூக்கள் மிக மிக மென்மையானவை, எளிதில் வாடி போகக்கூடியவை, மிக நீண்ட நாட்கள் பதப்படுத்த முடியாதவை. எனவே மல்லி, மரிக்கொழுந்து, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் பெருமளவில் விளையும் பகுதிகளான மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு சார்பில் ஒரு சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேலும், எதிர்பாரா இயற்கை பொய்த்தலை சமாளித்து, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், நியாயமான விலைக்கு அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-tamil-nadu-govt-to-establish-scent-factory



