திருப்பூர், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண், காங்கயம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் ஓலப்பாளையம் பஸ்சில் வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்தார். தொடர்ந்து அவரிடம் அத்துமீறியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து அறிந்ததும், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் மற் றும் போலீசார் அங்கு சென்று, வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம், மலாய் மாவட்டம், மத்தி பாய் பகுதியைச் சேர்ந்த ஜிதேஷ் குமார் என்பதும், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-woman-sexually-harassed-while-walking-on-the-road




