தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்கள் உள்ளனர். தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் மற்றும் தகவல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், பிரியகு மார், திருமலைமுத்து ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு 5 ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முதல்-அமைச்சர் தலைமையில் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி, பட்டியலில் உள்ளவர்களில் யாரை ஆணையராக தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் தேடல் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழு தகுதியானவர்களிடம் இருந்து விண் ணப்பங்களை பெற்று இறுதிப்பட்டியலை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அந்த வகையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மட்டும் அதில் பங்கேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க வில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-to-select-information-commissioners-held-under-vijays-leadership-udhayanidhi-did-not-participate




