நடிகர் சூரியின் ‘மண்டாடி’ மற்றும் நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில், ‘சர்தார் 2’ கலவையான விமர்சனங்களையும் ‘மண்டாடி’ நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து நேற்று திரைக்கு வந்துள்ள படம் ‘மண்டாடி’. இப்படத்தில் அவருடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படகுப் போட்டியை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள இப்படமும், நேற்று முதல் நாளில் ரூ 5 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான ‘சர்தார்’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், மீண்டும் அவர்கள் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ‘சர்தார் 2’. இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம், முதல் நாளில் 4.50 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 5 கோடியையும் ‘சர்தார் 2’ ரூ. 4.50 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரியின் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படமாகவும் ‘மண்டாடி’ மாறியுள்ளது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்திருப்பதால் இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியின் நடிப்பு, கடல் காட்சிகள், படகு போட்டி காட்சிகள், ஆக்சன் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. இதனால், ‘மண்டாடி’ திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. The Hype Was Real For! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sooris-mandaadi-beats-karthis-sardar-2-at-the-box-office




