உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப், ஆன்லைனில் இருக்கும் பயனர்களை எளிதாக அடையாளம் காண உதவும் 'கிரீன் டாட்' (Green Dot) வசதியை தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா (Beta) பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. டிபி அருகே தோன்றும் பச்சை நிற புள்ளி புதிய அப்டேட்டின் மூலம், சாட் பட்டியலில் தற்போது ஆன்லைனில் இருக்கும் பயனர்களின் புரொஃபைல் புகைப்படம் (DP) அருகில் சிறிய பச்சை நிற புள்ளி காண்பிக்கப்படும். இதன் மூலம் எந்த பயனர்கள் தற்போது ஆன்லைனில் உள்ளனர், உடனடியாக பதிலளிக்கக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனால் தனிப்பட்ட உரையாடல்கள் மட்டுமின்றி, அலுவலகம் மற்றும் குழு தொடர்புகளிலும் பயனர்களுக்கு விரைவான தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியுரிமைக்கு பாதிப்பு இல்லை அதேநேரத்தில், பயனர்களின் தனியுரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. 'Last Seen' மற்றும் 'Online' நிலையை மறைக்கும் தனியுரிமை அமைப்பை (Privacy Settings) தேர்வு செய்திருக்கும் பயனர்களுக்கு இந்த கிரீன் டாட் குறியீடு காட்டப்படாது. தற்போது இந்த வசதி சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/if-you-are-online-you-can-now-find-asiawhatsapp-has-started-testing




