சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான 'ஜனநாயகன்', இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இணையத்தில் கசிந்தும் குறையாத வரவேற்பு படம் வெளியாகும் முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்தது. குறிப்பாக, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே 'ஜனநாயகன்' சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இருப்பினும், விஜய்யின் கடைசி படம் என்ற உணர்வால் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு திரண்டு படத்தை கொண்டாடி வருகின்றனர். வசூல் வேட்டை தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் இந்த படம் ரூ.295.92 கோடி வசூலித்து, ரூ.300 கோடியை நெருங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.204.92 கோடியும், வெளிநாடுகளில் ரூ.91 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படம் ரூ.500 கோடி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/11-days-since-release-do-you-know-how-much-jana-nayagan-has-collected




