வாஷிங்டன், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் விரைவில் யு.பி.ஐ. சேவை தொடங்கவுள்ளது. இத னால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணத்திற்கு பதிலாக மொபைல் தேநீர் கடை முதல் பிரமாண்ட வணிக வளாகங்கள் வரை இன்று இந்தியர்களின் பாக்கெட்டு களில் பணத்திற்குப் பதிலாக மொபைல் போன்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தி யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை. இன்று கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளது. உலக நாடுகளே இந்தியாவின் இந்த அசுர வேக டிஜிட்டல் வளர்ச்சியை வியப்புடன் உற்று நோக்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளைத் தொடர்ந்து, தற்போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இந்தியாவின் யு.பி.ஐ. சேவை இந்த ஆண்டின் இறுதிக் குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ளது. அமெரிக்காவின் பிரபல 'பேங்க் ஆப் அமெ ரிக்கா', அங்குள்ள முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியான 'ஸெல்லி' உடன் இந்தியா வின் யு.பி.ஐ. அமைப்பை இணைக்கும் பிரமாண்ட கூட்டுப்பரிசோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம், அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், இனி எவ்வித இடைத்தரகர்களும் இன்றி தங்களது வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு நொடிப் பொழுதில் பணம் அனுப்ப முடியும். ரூ.3% லட்சம் கோடி கடந்த நிதியாண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமாக இந்தியாவுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி (135 பில்லியன் டாலர்) பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா வில் இருந்து மட்டுமே சுமார் 3% லட்சம் கோடி (37 பில்லியன் டாலர்) அனுப்பப்பட்டு, இந்தி யாவிற்கு அதிகப் பணம் வரும் நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த புதிய 'ஸெல்லி-யு.பி.ஐ.' இணைப்பு மூலம், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், அசுர வேகத்திலும் மாறும் என்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/upi-service-coming-soon-in-us-overseas-indians-happy



