திருச்சி, இளம் வயது கர்ப்பம் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதிக்கும் ஒரு சமூக பிரச்சினையாகும். இது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார பராமரிப்பு அவ்வளவாக மேம்பட்டிராத வளர்ச்சியடையாத நாடுகளில் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. பொது சுகாதார பிரச்சினை இந்தியாவில் பெண் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், வளர் இளம் வயது கர்ப்பங்கள் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. வளர் இளம் வயது சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் பிரசவம் அதிகரித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான அறிக்கை திடுக்கிட வைத்துள்ளது. குழந்தை திருமணம், திருமண வயதை எட்டும் முன்னரே காதல் உறவு போன்ற காரணங்களால் இளம் வயது கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 6 (NFIIS-6) -ன் தரவுகளின்படி, இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 6.7 சதவீதம் பேர் ஏற்கனவே குழந்தைகளை பெற்றெடுக்க தொடங்கியுள்ளனர். இது தமிழகத்தில் 4.1 சதவீதமாகவும், திருச்சியில் 1 சதவீதமாகவும் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தாய் இறப்பு மற்றும் சிசு இறப்பு போன்ற முக்கிய சுகாதாரக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், வளர் இளம் வயது கர்ப்பங்கள் தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளன. இளம்பெண்கள் பிரசவிப்பு திருச்சி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 479 வளர் இளம் பெண்கள் பிரசவித்துள்ளனர். 2026-ம் ஆண்டில் கடந்த ஆகஸ்ட் வரை மட்டும் 296 வளர் இளம் பெண்கள் பிரசவித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் கூறுகின்றன. இளம்வயது கர்ப்பம், சுகாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு, தாய்மார்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக தினமும் 3 முதல் 4 வளர் இளம் பெண்கள் கர்ப்பம் அடையும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், ஒரு மாதத்திற்கு சுமார் 100 சம்பவங்கள் நடப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2024-25 நிதியாண்டில் மட்டும் 1,234 சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. கல்லூரி, பள்ளியில் பிரசவம் சமயபுரம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி கழிவறையில் மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் விடுதியில் தங்கி படிக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளி வளாகத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விழிப்புணர்வு வளர் இளம் வயதில் குழந்தைகள் வயிற்றில் குழந்தையை சுமக்க முக்கிய காரணம், இளம் வயது திருமணம், பாலியல் வன்முறை, பெண்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவைதான். மேலும் குழந்தை திருமணத்தை தவிர, சமூக ஊடக தொடர்புகள் மூலம் உருவாகும் உறவுகளும் வளர் இளம் வயது கர்ப்பங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளம் வயது பெண்கள் கர்ப்பம் அடைவதை தடுக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-teen-pregnancies-in-tiruchirappalli-district-will-sex-education-be-prioritized




