அம்மான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரான் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா ஹூசேன் காமேனி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் மோதல் ஆனால், உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. 2 அமெரிக்க வீரர்கள் பலி அந்த வகையில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள், அமெரிக்க ஆதரவு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து அமெரிக்கா - ஈரான் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/ஜோர்டன்-மீது-ஈரான்-தாக்குதல்-அமெரிக்க-வீரர்கள்-2-பேர்-பலி




