பாலக்காடு, கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி (வயது 77). இவர் கடந்த 1965-ம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அவர் மதுரையில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் அவர் ஆலத்தூர் நூலகத்தில் உறுப்பினராகி, புத்தகங்கள், நாளிதழ்களை வாசித்து வந்தார். இதன் மூலம் கிருஷ்ணன் குட்டி, கல்வி கற்க வயது தடை இல்லை என கருதி உயர்கல்வியை தொடர ஆலத்தூர் வட்டார எழுத்தறிவு மையத்தில் சேர்ந்தார். அங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை படித்து வந்தார். இந்த நிலையில், 10-ம் வகுப்பு முடித்து 61 ஆண்டுகள் ஆன நிலையில் பிளஸ்-1 தேர்வில் 74 சதவீத மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணன் குட்டி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது அவர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளார். இந்த தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றால் பட்டப்படிப்பு படிப்பேன் என்று கிருஷ்ணன் குட்டி கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/77-year-old-man-passes-plus-1-exam-after-61-years



