இந்தியா–விளையாடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஆட்டத்தின் மீதுதான் இருக்கும். ஆனால், டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பே, மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் டி20 போட்டியில் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மைதானத்தில் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது வழக்கமாக ஒலிக்கப்படும் தேசிய கீதத்துக்கு முன்பாக, ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட்டது. இந்தியா–ஆப்கானிஸ்தான் போட்டி இதில் முக்கியமான விஷயம் இந்தப் போட்டியில் ‘வந்தே மாதரம்’ வழக்கமான சில வரிகளாக இல்லாமல், ஆறு சரணங்களுடன் முழுமையாக ஒலிக்கப்பட்டது. இதற்கு சுமார் 3 நிமிடங்கள் 10 விநாடிகள் எடுத்திருக்கிறது. தொடர்ந்து 52 விநாடிகள் தேசிய கீதம் ஒலித்துள்ளது.இரண்டும் சேர்ந்து 4 நிமிடங்கள் 2 விநாடிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டை நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.அதன்படி, தேசியப் பாடலும் தேசிய கீதமும் ஒரே நிகழ்வில் இடம்பெறும்போது, முதலில் ‘வந்தே மாதரம்’, பின்னர் ‘ஜன கண மன’ என்ற வரிசை பின்பற்றப்படுகிறது. இந்தியா–ஆப்கானிஸ்தான் போட்டி இதன்படி, இந்தியா–ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு முன்பு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதுவரை அரசு சார்ந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த முழு வடிவம், தற்போது சர்வதேச விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றுள்ளது. இது முதல் முறையாக ஒரு விளையாட்டு நிகழ்வில் நடந்துள்ள நிலையில், வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ‘ஜன கண மன’ மற்றும் ‘வந்தே மாதரம்’ இரண்டும் இடம்பெறுமா? என்பதுதான் இனி கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீரர் PCBக்கு வார்னிங் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://sports.vikatan.com/the-vande-mataram-song-was-sung-before-the-start-of-the-india-afghanistan-cricket-match



