கோவை மாவட்டம் கிணத்துகடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான விக்னேஷ், இன்று காலை தனது தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து சாக்கடை கால்வாயைச் சுத்தம் செய்தார். அப்போது தூய்மைப் பணியாளர்கள் உடன் கலந்துரையாடிய அவர், தூய்மைப் பணிக்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடினார். பின்னர் கால்வாயில் மணல் தேங்கி இருப்பதை அகற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். அமைச்சர் விக்னேஷ் ஆய்வுப் பணியின் போது குறிச்சி பகுதியைச் சேர்த்த பொதுமக்கள், குறிச்சி குளக்கரையில் பள்ளி குடியிருப்பு வளாகம் அருகே சிலர் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்களால் குளக்கரையில் வாக்கிங் செல்ல முடியவில்லை எனவும், இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தினார். திருச்செந்தூர்: `மன்னிப்பு கடிதம் அல்ல; விளக்கம்; நடவடிக்கை உண்டு' - ஆய்வுக்குப்பின் அமைச்சர் ரமேஷ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/minister-vignesh-cleaned-sewerage-along-with-sanitation-workers




