Articolo completo
தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோயில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி அவரின் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். வெள்ளாங்கோயில் பாக்யராஜ் நினைவுகள் குறித்து தெரிவிக்கும் வெள்ளாங்கோவில் கிராம மக்கள், "இந்த ஊரில்தான் அவர் பிறந்தார். பக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளியில்தான் சில ஆண்டுகள் படித்தார். சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக உயர்ந்தார். சினிமாத்துறையில் உச்சத்தில் இருந்த போதும் சொந்த ஊரான வெள்ளகோயிலை அவர் ஒருபோது மறந்ததில்லை. எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். கோயில் திருப்பணிகளுக்கும் நிறைய நன்கொடைகளை அளித்திருக்கிறார். அதேபோல சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவம், கல்வி தேவைகளுக்கும் நிறைய உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். வெள்ளகோயிலில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சினிமா கனவுகளைச் சுமந்துச் சென்று பெரிய ஆளுமையாக உயர்ந்த கே.பாக்யராஜ் அவர்களின் புகழும் நினைவுகளும் என்றைக்கும் பசுமை மாறாமல் எங்கள் கிராமத்தில் நிலைத்திருக்கும் " என்றனர். Bhagyaraj: "கிராமத்து கதைகளை அகாடமிக்காக சொன்னவர் பாக்யராஜ்!" - சிவக்குமார் இரங்கல்| Live முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto



