தூத்துக்குடி, தூத்துக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மாநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (10.9.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம்,ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம் முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர் குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர் முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-5




