ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் பதா கிராமத்தின் கொயனா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி அதை கடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. 3 பேர் பலி இந்நிலையில், பதா கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று மாலை ஆற்றை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஆற்றில் நீரில் அளவு திடீரென அதிகரித்தது. இதில் அடுத்து செல்லப்பட்ட 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. அதை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/tragedy-in-jharkhand-three-drown-in-river




