மும்பை, மராட்டிய மாநிலம் கொலாபா பகுதியை சேர்ந்தவர் புரன்மல் ஷம்புலால் (வயது 30). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றி வந்தார். இதனிடையே புரன்மல் ஷம்புலாலுக்கு ஒமா என்ற மனைவியும் (வயது 28), 2 குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், புரன்மல் ஷம்புலால் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் புரன்மல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கடற்படை வீரர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/maharashtra-indian-navy-sailor-kills-wife-children-dies-by-suicide




