டிரினிடாட், கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஜமைக்கா - கயானா மோதல் இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. 117 ரன்களுக்கு ஆல் அவுட் இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த ஜமைக்கா 19.4 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹெண்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய கயானா வீரர் முகமது நபி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கயானா வெற்றி இதனை தொடர்ந்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா 14.1ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜமைக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கயானா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய கயானா வீரர் ஹோப் 56 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-guyana-easily-defeat-jamaica




