ஆமதாபாத், சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்ட விதிகளை பின்பற்ற வகைசெய்யும் குஜராத் பொது சிவில் சட்ட மசோதா, கடந்த மார்ச் 24-ந்தேதி குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பிறகு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். குஜராத் அரசின் அரசிதழில் இதுதொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு முடிவு செய்யும் நாளில், இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. திருமணம்,விவாகரத்து, வாரிசுரிமை, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் உள்ளிட்ட சிவில் விவகாரங்களை இச்சட்டம் ஒழுங்குபடுத்தும்.ஒட்டுமொத்த குஜராத் மக்களுக்கும், வெளிமாநிலங்களில் வசிக்கும் குஜராத் மக்க ளுக்கும் இச்சட்டம் பொருந்தும். இருப்பினும், அரசியலமைப்பின் 342-வது பிரிவின்கீழ் வரும் பழங்குடியினருக்கும், அரசியலமைப்பின் 21-வது அட்டவணையில் பாதுகாக்கப்பட்டுள்ள சில குழுக்களுக்கும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம். ஏற்கனவே இந்த சட்டம் உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது குஜராத்திலும் அமலுக்கு வந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/presidential-assent-for-the-implementation-of-the-uniform-civil-code-in-gujarat




