திருப்பூர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓவிய ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்சோவில் கைது இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு சென்று, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த எழுத்துப்பூர்வமான புகாரின் பேரில், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/art-teacher-arrested-for-sexually-harassing-female-students



