சென்னை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06151) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை (நெல்லை) சென்றடையும். மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 14-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06152) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். 23 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-special-train-between-chennai-nellai




