அமராவதி, ஆந்திராவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வுக்கான (டி.எஸ்.சி) வினாத்தாள் கசிவு மற்றும் விளையாட்டு இடஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி ஆந்திர கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அவர்களது போராட்டத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நகரியில் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். முன்னாள் மந்திரியுமான ரோஜா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை நேர்மையாக நடக்க கல்வி மந்திரி நாரா லோகேஷ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/exam-irregularities-in-andhra-actress-roja-on-hunger-strike




