Articolo completo
கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் பேசியிருந்தது சர்ச்சை கிளப்பி இருந்தது. 'கட்டா குஸ்தி-2' அதவாது பேட்டியில் பேசியிருந்த அவர், " சோஷியல் மீடியாவின் பயன்பாடு இன்று மிக மிக அதிகமாக இருக்கிறது. அவை சில சமயங்களில் ஆபத்தானதாகவும் மாறுகிறது. தலைவரே (ரஜினி) மைக்கை பிடித்துக்கொண்டு, 'எனக்கும் விஜய்க்கும் ஒன்றும் இல்லை' என விளக்கம் சொல்லும் நிலைமைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட விசித்திரமான சூழலில்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தலைவரே கூட நான்கு நாட்கள் எந்தப் பதிவும் போடாமல் அமைதியாக இருந்தால்கூட அவரை பற்றி ஏதோ ஒரு தவறான விஷயத்தை கிளப்பி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கிவிடுகிறார்கள். இதனால் அவரே வேறு வழியில்லாமல் நான் ஏன் இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நொந்து போய் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது" என்று பேசியிருந்தார். விஷ்ணு விஷாலின் இவ்வாறு பேசியதற்கு, "'எப்படி நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லிவிட்டு, விஜய்யை மட்டும் பெயர் சொல்லி அழைக்கலாம்' என விஜய் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வந்தனர். விஷ்ணு விஷால் இந்நிலையில் செய்தியார்கள் சந்திப்பில் இதற்கு விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்திருக்கிறார். "விஜய்யை பற்றி ரஜினி என்ன பேசிருக்கார் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். ரஜினியும் விஜய்யை விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். நிறைய பேர், 'ரஜினியை மட்டும் ஏன் தலைவர் என்று கூப்பிட்டுவிட்டு, விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள்' என கேட்கிறார்கள். ரஜினி விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதைத்தானே நானும் சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது. யாரையும் கஷ்டப்படுத்த நான் அப்படி பேசவில்லை. சோஷியல் மீடியாக்களில் தென்படும் வன்மம் பற்றித்தான் பேசினேன். அதில் இருந்து நான் பின் வாங்கப்போவதில்லை" என்று விளக்கமளித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




