வாசிங்டன், அமெரிக்காவின் இண்டர்டேட் 76 நெடுஞ்சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் பெரிய டயர் ஒன்று கழன்று காற்றில் பறந்து எதிரே வந்த காரின் மீது பாய்ந்து அதன் முன்பகுதி நொறுங்கியது. விபத்து அமெரிக்கா, பிலடெல்பியாவின் இன்டர்ஸ்டேட் 76 நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய பாதையில் நிசான் ரக எஸ்யூவி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் மறுபுறம் சென்ற ஏதோ வாகனத்தில் இருந்து திடீரென டயர் ஒன்று கழன்று தனியாக ஓடியது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அந்த ராட்சத டயர், சாலையின் நடுவே இருந்த கான்கிரீட் தடுப்பைத் தாண்டி, அதிவேகத்தில் காற்றில் பறந்து வந்து எதிரே வந்த காரின் முன்பகுதியில் நேருக்கு நேர் மோதியது. நொறுங்கிய கார் – தப்பிய உயிர்கள் டயர் மோதிய வேகத்தில் அந்த காரின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கி உருக்குலைந்தது. அதன் விண்ட்ஷீல்டு கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தின் அதிர்ச்சி காட்சிகள் அங்கு சென்ற மற்றொரு டெஸ்லா காரின் டேஷ்கேம் கேமராவில் பதிவாகியது. விபத்தின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், நல்வாய்ப்பாக காரை ஓட்டிச் சென்றவர் மற்றும் உள்ளே இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். போலீசார் விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக பென்சில்வேனியா மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டயர் எந்த வாகனத்தில் இருந்து கழன்று ஓடிவந்தது என்பதை கண்டறிய, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பிற வாகனங்களின் டேஷ்கேம் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/usa-giant-tire-suddenly-crosses-path-of-car-family-narrowly-escapes-death




