தென்காசி, குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. குறிப்பாக, புலியருவியில் தண்ணீர் வரத்து இன்று வறண்டு காணப்பட்டது. இதற்கிடையே,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-flood-at-courtallam-falls-bathing-prohibited




