சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள். மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-grants-thangam-thennarasu-responds-humorously-to-the-speakers-remark




