சென்னை, திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. வேட்புமனுத்தாக்கல் ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (9-ந்தேதி) தொடங்கியது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. திமுக வேட்பாளர்கள் இந்நிலையில் தாராபுரம், மதுரந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிட்டுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் தவெக இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அதேபோல, அதிமுகவும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், முதல் கட்சியாக திமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார். பறக்கும் படையினர் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 9 பறக்கும் படையினர் மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-fallout-intensive-surveillance-in-maduranthakam




