தர்மபுரி, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், அக்கட்சியினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆய்வு நடத்துவது போன்ற வீடியோக்கள் ரீல்சாக வலம் வந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரீல்ஸ் வெளியிடக்கூடாது - முதல்-அமைச்சர் விஜய் இதையடுத்து, அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி ரீல்ஸ் வெளியிடக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பள்ளியில் ஆய்வு இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறை, சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி உள்ளார். ரீல்ஸ் வீடியோ இதேபோல் பெரும்பாலை பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அங்கு சென்று மாணவ-மாணவிகளை பார்த்த பென்னாகரம் எம்.எல்.ஏ. கஜேந்திரன் அவர்களிடம் நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-conducts-inspection-at-government-school-and-releases-reels



