நகோயா, ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. நாளை மாலை நடைபெறும் வண்ணமயமான நிறைவு விழா வில் கண்கவர் நடனங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு. வாண வேடிக்கை. லேசர் ஜாலம் என பார்வயாளர்களை பரவசப்படுத்தப்போகிறது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆசிய விளையாட்டில் அவர் இரு தங்கம். ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை சுட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் துப்பாக்கி சுடுதல் டிராப் தனிநபர் பிரிவில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். 26 வயதான நீரு தண்டா அரியானாவைச் சேர்ந்தவர். மேலும் வீரர் ஒருவரும் தேசிய கொடியை ஏந்தி செல்வதற்கு தேர்வு செய்யப் பட இருப்பதாக இந்திய குழுவின் துணைத்தலைவர் அஞ்சலி பகவத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/neeru-dhanda-carries-the-national-flag-at-the-asian-games-closing-ceremony




