திருவள்ளூர், திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை திருவள்ளூர், பெரியகுப்பம்- கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டரான இவரது மகன் சீனிவாசன்(17), திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை நாள் என்பதால் நேற்று மதியம் சீனிவாசன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். மின்சாரம் தாக்கி அப்போது, பக்கத்து வீட்டு சிறுவன், சீனிவாசன் வீட்டில் மடிகணினிக்கு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. உறக்கத்தில் இருந்த சீனிவாசன், சார்ஜர் போட்டிருந்ததை கவனிக்காமல் சார்ஜர் வயரை பிடித்த போது, அதில் கசிந்த மின்சாரம் தாக்கி மயங்கியதாக தெரிகிறது. வழக்குப் பதிவு இதையடுத்து, சீனிவாசன், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-holding-charger-wire-while-asleep-dies-of-electrocution




