சட்டமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தொடர்ந்து போதைப்பொருளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் அரசின் கவனத்திற்கு எடுத்து வந்தோம். உதயநிதி ஸ்டாலின் ஆனால் அதற்கெல்லாம் சரியான பதிலை இந்த அரசு அளிக்கவில்லை. மாறாக எங்கள் மீதுதான் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தெளிவான விளக்கத்தை அளிக்காமல் எப்போதும் போல பழியை எங்கள் மீது சுமத்துகின்றனர். TN Assembly: 'முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டும்.'; அமைச்சர் ரமேஷ் vs நேரு வாதம் | Live அதுமட்டும் அல்லாமல் கடந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை என்று. இதற்கு என்ன கரணம் என்றால் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்தத் துறைக்கான கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதில்லை. உதயநிதி ஸ்டாலின் உதாரணத்திற்கு இன்று போதைப்பொருள் பற்றி சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தோம். இதற்கு முழு பொறுப்பு யார் ஏற்க வேண்டும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தத் துறை அமைச்சர் இன்று சட்டமன்றத்திற்கு வரவே இல்லை. இதையெல்லாம் கண்டித்துத்தான் வெளிநடப்பு செய்தோம். தவெக அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ நாங்கள் ஆட்சி செய்யும்போது வெளியாகி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்" என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-stalin-press-meet-after-staging-a-walkout-from-assembly




