ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலை சேர்ந்த வழக்கறிஞர் விங்க்லர் ஷலித், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்த விவரங்களை கேட்டிருந்தார் இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மாத வாரியாக செலவிடப்பட்ட தொகை குறித்த விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, 2019-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரதமரின் சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக மொத்தம் ரூ.4.49 கோடி செலவிடப்பட்டுள்ளது.இதில் 90 சதவீத தொகை, அதாவது ரூ.4.04 கோடி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/israeli-government-spent-several-crores-solely-on-netanyahus-hairstyling




