நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தன. இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், 'கங்கனா' திரைப்படங்களில் நடித்த சில கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டெல்லி போராட்டம் இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் கங்கனா பதில் கொடுத்திருக்கிறார். அதில், "கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, பலத்த பாதுகாப்புடன் ஒரு நடிகையாக திரைப்படக் கதாபாத்திரங்களில் நான் நடித்த காட்சிகளைப் பயன்படுத்தி, வளரும் இளம் தலைமுறையினரைத் தவறாக வழிநடத்த முயலாதீர்கள். ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது? திரையில் ஒரு கதாபாத்திரமாக நடிப்பது வேறு; நிஜ வாழ்க்கையில் பள்ளிகளிலோ, பொது வீதிகளிலோ அல்லது மதுபானக் கூடங்களிலோ நடப்பது வேறு. கங்கனா ரனாவத் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இன்று நீங்கள் மற்றவர்களின் குழந்தைகளைத் தவறாக வழிநடத்தினால், நாளை அது உங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே நடக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார். ``சாக்கடை தலைமுறை; வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது"- மாணவர்கள் போராட்டம் குறித்து கங்கனா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/bollywood/kangana-ranaut-hits-back-at-trolls-using-her-film-roles-to-question-her-gen-z-remarks




