சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் த.சாமிநாதன் (வேடசந்தூர்), வனத்துறை தொடர்பாக துணை கேள்வி கேட்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரு பேப்பரில் 20 வினாடிகளில் பேசிவிடுவேன். அனுமதி கொடுங்கள் என துண்டு சீட்டில் எழுதி சபாநாயகரிடம் கொடுத்தார். இதையடுத்து அனுமதி வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், '20 வினாடிகளில் பேசி முடித்துவிடுவேன் என எழுதி கொடுத்திருக்கிறார்' என்றார். அதையடுத்து சாமிநாதன் எழுந்து, "வேடசந்தூர் தொகுதி, சுக்காம்பட்டி ஊராட்சி, வளவி செட்டிபட்டியில் இருந்து சுக்காம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் சாலை, மழைக்காலங்களில் உறுதியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அது வனத்துறைக்கு சொந்தமானது. இந்த சாலையை செப்பனிட்டுத்தர தங்கள் வாயிலாக கேட்கிறேன்" என்றார். உறுப்பினர் சொன்னபடி, 20 வினாடிகளுக்குள் அதாவது 14 வினாடிகளுக்குள்ளாகவே கேள்வியை கேட்டு முடித்துவிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்சித்குமார், "இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மண்சாலைகள் இருக்கின்றன. அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14




