இம்பால், மணிப்பூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலை தூக்க தொடங்கியுள்ளன. அங்கு நேற்று முன்தினமும் தமன்லாங், நோனி மாவட்டங்களில் கிராமங்களில் புகுந்து தாக்கிய நாகா பயங்கரவாதிகள் 2 பெண்கள் உள்பட 4 பேரை கொலை செய்தனர். இந்த சம்பவத்துக்கு குகி-சோ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மணிப்பூரை இந்த ஆண்டு முழுவதும் நாகா ஆயுத குழுக்கள்தான் இயக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அந்த கவுன்சில், இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள், பெண்கள் என 22 குகி பழங்குடியின மக்கள் இந்த கும்பலால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, மணிப்பூரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுதக் குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், மணிப்பூரை மற்றொரு முழு அளவிலான மோதலை நோக்கித்தள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது' என எச்சரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/risk-of-renewed-violence-in-manipur



