புதுடெல்லி, காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு வாதிடுகையில், ‘கர்நாடக அணைகளில் 78 டிஎம்சி தண்ணீர் உள்ளது. விகிதாச்சாரப்படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்துவிட்டாலும், முந்தைய பற்றாக்குறை நீரை ஈடுசெய்ய போதிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை’ என வாதிடப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில், ‘காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை நீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை’ என வாதிட்டது. அப்போது, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை என சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், தற்போதைய சூழல் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இரு தரப்பும் புதிய விவரங்களை பதிவு செய்யவேண்டும் எனவும், திறக்கப்பட்ட நீர், பெறப்பட்ட நீரின் அளவு பற்றி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/case-regarding-cauvery-water-sharing-adjourned-to-august-31




