சென்னை, சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை குறைந்து வந்த தங்கம் விலை 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் மீண்டும் விலை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.800-ம், கிராமுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-400-per-sovereign




