சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், கீழடியில் வாழ்ந்த மக்கள், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக ஒவ்வொரு கட்ட அகழாய்விலும், இரண்டு முதல், ஏழு அடுக்குகள் வரையுள்ள உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. குடிநீர்,பாசனம் மற் றும் சாயத்தொழிலுக்கு உறைகிணறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கீழடி, 11ம் கட்ட அகழாய்வில், ஒரே குழியில் அடுத்தடுத்து மூன்றுவித வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே, இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. இரண்டாவதாக கண்டறியப்பட்ட உறைகிணறில், எட்டு அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. சேதமடையாமல் உள்ள அந்த உறைகிணற்றில், மேலும் சில அடுக்குகள் இருக்க வாய்ப்புள்ளதால், தொடர்ச்சியாக அகழாய்வு பணி நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/eight-tiered-ring-well-discovered-at-the-keeladi-excavation-site




