லண்டன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2026-ம் ஆண்டில் இதுவரை அதிக நோ-பால்களை வீசிய அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 6 டெஸ்ட் போட்டிகளில் 61 நோ-பால்களை வீசியுள்ளது. இதன் மூலம் இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 38 நோ-பால்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஒரே வீரர் 34 நோ-பால்கள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசாத், நடப்பு ஆண்டில் தான் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 34 நோ-பால்களை வீசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஆண்டு முழுவதும் வீசிய நோ-பால்களை விட இது வெறும் 4 மட்டுமே குறைவு. லார்ட்ஸ் டெஸ்ட் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 66.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 3-வது நாள் ஆட்டம் இதையடுத்து 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/cricket-records-pakistani-bowlers-surpass-jadeja-a-strange-record-that-no-one-has-done-in-the-history-of-cricket




