சென்னை, பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கிருஷ்ண ஜெயந்தி திருநாள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகிட, எல்லாம் வல்ல பகவான் ஶ்ரீ கிருஷ்ணரைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-l-murugans-greetings



