சென்னை, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், "நீட்" மற்றும் "நெக்ஸ்ட்" தேர்வுகளில் இருந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ மற்றும் பல்மருத்துவ இடங்களுக்கு விலக்கு வழங்கிட வேண்டும், தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் 100 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கும் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். கம்யூனிட்டி இட ஒதுக்கீடு ஏழை மாணவர்களின் கல்வி, விடுதி, உணவு கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே ஏற்க வேண்டும். வட்டியில்லாத கல்விக் கடன்களை எந்த நிபந்தனையுமின்றி மாணவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ - பல் மருத்துவ இடங்களில் உள் ஒதுக்கீட்டை வழங்கிட NMC Act மற்றும் NDC Act ல் திருத்தம் செய்திட வேண்டும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் கம்யூனிட்டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும். மாப் அப் மற்றும் ஸ்ட்ரே கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம் கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடைமுறை படுத்திட வேண்டும். கட்டாய நன்கொடை மற்றும் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை எந்த இழப்பீடுமின்றி அரசுடமையாக்கிட சட்டம் கொண்டுவர வேண்டும். மருத்துவக்கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பொதுசுகாதாரத்துறையை வலுப்படுத்திட வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கி,பொது தனியார் பங்களிப்பு முறையில் ( PPP model ) மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிட அனுமதிக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின், கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணத்திற்கான நிதியை, இன்றைய விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும். கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மாணவர்கள் நல வாரியம் (welfare board),பாதுகாப்பு குழு (security committee),மாணவர் மன்றங்களை (students council) அமைத்திட வேண்டும்.ICC உட்புகார் குழுக்களை (விஷாகா கமிட்டிகளை ) அமைத்திட வேண்டும். பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படி மாணவர்களுக்கு தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக ஒரு கல்லூரி பேருந்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (28.07.2026) மாலை தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/protests-scheduled-to-take-place-in-government-medical-colleges-across-tamil-nadu-tomorrow-evening-have-been-cancelled




