சென்னை, ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என தவெக ஐ.டி. விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான். முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள். கீழ்த்தரமான அரசியல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது. ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்? அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல. ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-politics-is-not-new-to-dmk-thaveka-it-wing-criticism




